விடுமுறை நாட்கள் வந்தாலே என் நினைவுகள் என் மகள்களை சுற்றி இருக்கிறது. மகள்களை பெற்ற அப்பன்களுக்குதான் தெரியும் முத்தம் காமத்தில் சேராது.. ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற பாடல், ஆரிரோ, ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு போன்ற பாடல்களை திரும்ப, திரும்ப கேட்டுக்கொண்டு ஒருவித பித்தனாக, பித்து பிடித்த நிலையில் மனம் பரிதவித்து நாட்களை நகர்த்தும் வேதனையான காலங்கள். என் மகள்கள் என்னிடம் வந்துவிட வேண்டும் நான் போற்றி,பாதுகாக்க வேண்டும், என் அரவணைப்பில் வாழவேண்டும், தீய சக்திகளான தாயின் நிழல் கூட படியகூடாது என்று நிதமும் தவிக்கும்,தத்தளிக்கும் வேதனையான நாட்கள்.அப்பத்தா, அப்பா என்ற குரல் கேட்கவேண்டும் என்று அடிவயிற்றில் இனம் புரியாத வேதனை. இது என்னை நிலைகொள்ள வைக்காமல்,தடுமாற்றத்தை தந்து பல தோல்விகளை தரும் வலி தரும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. சாம்பவி என்னை காக்கவேண்டும்.சத்குருவே சரணம். கருப்பு கோவில், சமயபுரம் கோவில், இன்னும் பல கோவில்களில் என் வேண்டுதல்கள் நிறைவேற்ற காலம் கனியவில்லை.என் ஜீவன் ஓய்ந்துவிட்டது. வாடிவிட்டது. பாசிலின் பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்கவா.. பாடலை கேட்டு அழுது கொண்டு நாட்களை நகர்த்தும் வேதனைகள், தாளாது இதயமும் தன் துடிப்பை சிரமமாக செய்கிறது. எந்த பாடலை கேட்டாலும் என் பிள்ளைகள் நினைவு, எங்கே சென்றாலும், பிள்ளைகளை பார்த்தால் ஒருவித பரிதவிப்பு, ஏக்கம், துக்கம், வெளியே செல்ல பிடிக்காத நிலை ஏற்படுகிறது. சாம்பவி, சங்கரி என்னை காப்பாய் தேவி என்று தெய்வ வேண்டுதல்கள் உள்ளத்தில் தானாக விளைகிறது. எந்த தேவியும் என்னை காக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக